Published on 11/04/2019 | Edited on 11/04/2019

வெயில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வசந்தபாலன் அங்காடித்தெரு, காவியத்தலைவன் படங்கள் மூலம் பிரபலமானார். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'ஜெயில்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க திட்டமிடபட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.