உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துவருகின்றனர். இந்த சூழலில்நடிகர் விஷ்ணு விஷால் தன் நண்பரான நடிகர் சிம்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EWJDZWoU8AEV0PO.jpg)
''எனது முதல் திரைப்படத்திற்கு பிறகு, சிம்புதான் எனக்குதொழில்துறைரீதியில்கிடைத்த முதல் நண்பர். இப்போதுவரை நாங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். இந்த துறையில் பெரும்பாலானவர்களைவிட அவர், ஒளிவு மறைவு இன்றி நேராக பேசுபவர். அவர் ‘ராட்சசன்’ பட ஷூட்டிங் சமயத்தில் சினிமா குறித்த பல விஷயங்களையும், நடிப்பின் நுணுக்கங்களையும் எனக்கு கூறினார்'' என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)