Skip to main content

அடுத்தடுத்து 3 படங்களில் விஷ்ணு விஷால்...பிரபல பாலிவுட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

Published on 18/03/2019 | Edited on 18/03/2019
vishnu

 

ராட்சசன் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக 'ஜெகஜால கில்லாடி' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'வையகாம் 18 மூவிஸ்' Viacom18Movies தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Next Story

“திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்” - விஷ்ணு விஷால்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
vishnu vishal about his career and 15 years of  Vennila Kabadi Kuzhu

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இதில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமேஜின் கிரியேஷன் தயாரித்திருந்த இப்படத்திற்கு செல்வ கணேஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், 2019 ஆம் ஆண்டில் விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த நிலையில் வென்ணிலா கபடி குழு வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகளைக் கடக்கிறது. இதையொட்டி சுசீந்திரன் கூறுகையில், “வெண்ணிலா கபாடி குழு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவானதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆனந்துக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி” என்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஷ்ணு விஷால், “என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த என் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். 

எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப் பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி.! 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பல சவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.