ADVERTISEMENT

படப்பிடிப்பில் காயம்...மேல் சிகிச்சைக்கு சென்ற விஷால்

01:32 PM Feb 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி வருகிறது. அப்போது மாஸ்டர் பீட்டர் ஹெயின் பயிற்சியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நடிகர் விஷாலுக்கு கையில் அடிபட்டுள்ளது. சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால் கையில் ஏற்பட்ட வலி காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் விஷால் மேல் சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து பிறகு 'லத்தி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT