vishal 'Laththi' movie teaser trending in you tube

'ராணா ப்ரொடக்ஷன்' தயாரிப்பில் விஷால் நடித்துஉருவாகிவரும் திரைப்படம் 'லத்தி'. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே 'துப்பறிவாளன்' மற்றும் 'மார்க் ஆண்டனி' படத்திலும் விஷால் நடித்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில் 'லத்தி' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு காவல்துறையினரின் வாழ்க்கையை ஆக்ஷன், எமோஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டீசர் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

Advertisment

.