Vishal Injured 'laththi' movie shoot - Photo Goes Viral

Advertisment

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் பீட்டர் ஹெயின் பயிற்சியில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி சென்னையில் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விஷாலின் காலில் அடிபட்டது, இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து விஷாலுக்கு காயம் குணமடைந்தவுடன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அப்போது விஷாலுக்கு கையில் அடிபட்டு, பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு விஷாலுக்கு காயம் குணமடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.