vishal Laththi movie trailer released

Advertisment

ராணா ப்ரொடக்சஷன்தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லத்தி'. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படத்தின் டீசர் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் 'லத்தி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், முருகானந்தம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வாழ்க்கையில் நடப்பதை ஆக்சன், காதல் மற்றும் எமோஷன் கலந்து கதை உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ட்ரைலரில் வில்லன்களைப் பார்த்து, "உங்கள மாதிரி ஆட்களை கையில் லத்தி கொடுத்து அடிக்க சொன்னா... அது எங்களுக்கு உயர் அதிகாரி கொடுக்கிற ஆர்டர் இல்ல டா... ஆஃபர்" விஷால் பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இம்மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இம்மாதம் முடிய இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே 'துப்பறிவாளன் 2' படத்தைநடித்தும் இயக்கியும் மற்றும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்தும் வருகிறார் விஷால்.

Advertisment