ADVERTISEMENT

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்; படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

04:56 PM May 10, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கம் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இடத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் நியூ லுக் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்துள்ள ஸ்ரீகாந்த் 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT