/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/653_20.jpg)
பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்தி வந்தது. இதற்காக நடிகர் விஜய் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் விஜய் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்த ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாகவும் நமக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)