ADVERTISEMENT

'36 வருட தவம்...' - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி ட்வீட்

11:28 AM May 05, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2017-ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு அந்தோலஜி ஜானரில் வெளியான 'அவியல்' படத்தில் இவர் இயக்கிய 'காலம்' என்ற குறும்படம் இடம்பெற்றது. 'மாநகரம்' படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து 'கைதி' படம் எடுத்தார். வழக்கமான மசாலா படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதையில் வெளியான இப்படம் அனைவரின் கவனத்தை பெற்று தன் இயக்கத்திற்காக பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படம் எடுத்தார். இந்த படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. விஜய்யை வைத்து இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக முன்னேறினார்.

இதனிடையே அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கிமுடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது . இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் 'ஹாட்ஸ்டார்' நிறுவனமும் சாட்டிலைட் உரிமை 'ஸ்டார்' நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் " 36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட " என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. எனவே கமலிடம் இருந்து பாராட்டு பெற்றதை மகிழ்ச்சியுடன் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT