மாஸ்டர் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவேகமல்ஹாசன், விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில்ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்ரம் படத்தின்முதல் பார்வை குறித்ததகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்தட்விட்டர் பதிவில், வரும் நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின்பிறந்தநாளை முன்னிட்டு நாளை ( 6.11.2021) மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின்முதல் பார்வை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.அத்துடன் படத்தின்போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
சமீபத்தில், விக்ரம் படக்குழு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுகுறிப்பிடத்தக்கது.
Advance Happy Birthday Ulaganayagan @ikamalhaasan sir?
The First Glance into the world of VIKRAM awaits you all tomorrow at 6pm?#HBDUlaganayagan#Vikram_April2022 pic.twitter.com/jKSsjKaH0o
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 5, 2021