Skip to main content

'விக்ரம்' திரைப்படம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

High Court has ordered a ban Vikram movie illegal piracy internet

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியான வழக்கு தொடர்படுவதும், பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி படம் இணையத்தில் வெளியாவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த திரை பிரபலத்தைக் கௌரவித்த கமல்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kamalhassan recognize singeetam srinivasa rao

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கமல், சினிமாவை தாண்டி மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருவதால் வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணிகளில் பிஸியாகவுள்ளார். 

kamalhassan recognize singeetam srinivasa rao

இதனிடையே பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவுக்கு விழா எடுத்துள்ளார் கமல்ஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இண்டர்நேஷ்னல் சார்பாக  ‘அபூர்வ சிங்கீதம்’ என்ற தலைப்பில் திரைப்படவிழாவை தொடங்கி, இருவரது கூட்டணியில் வெளியான படங்கள் அடுத்தடுத்து திரையிடப்படவுள்ளன. சென்னை அடையாறில் உள்ள NFDC-ல் வருகின்ற 18ஆம் தேதி பேசும் படம், 19ஆம் தேதி அபூர்வ சகோதரர்கள், 20ஆம் தேதி மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. தொடக்க விழாவில், ராஜபார்வை படம் திரையிடப்பட்டு சிங்கிதம் சீனிவாச ராவ், கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு படம் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இப்படம் கமலின் 100வது படமாகும்.  

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழில் கமலை வைத்து 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'காதலா காதலா' என காலத்தால் அழியாத படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் 'சின்ன வாத்தியார்', 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குவதையும் தாண்டி கதையாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு தற்போது வயது 92.

கடந்த ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவின் பிறந்தநாளான செப்டம்பர் 21ஆம் தேதி கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் சிங்கிதம் சீனிவாசராவ்காரு. அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவ்” என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்'-ம.நீ.மவில் புகைச்சல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
 'I am resigning with great regret'-M.N.M

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம் அரசியல் கட்சிகளின் கூட்டணி காய் நகர்த்தலில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சிலர் தான் பயணித்த அரசியல் கட்சிகளிலிருந்து மற்றொரு கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடும் என காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியது அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்காமல் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒன்றை வாங்கி விட்ட நிலையில் இது கட்சிக்குள் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை சந்திக்காமல் விலகுவது கட்சியினுடைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அனுஷ்கா ரவி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதோடு அவர் பாஜகவிலும் இணைந்துள்ளார்.

 'I am resigning with great regret'-M.N.M

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் அரசியலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.