hollywood actress mckenzie westmore Praise kamalhaasan

இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4ஆண்டுகளுக்குப்பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைநெருங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.

Advertisment

இதனிடையே இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகைமெக்கன்ஸி வெஸ்ட்மோர் விக்ரம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர், "என்னுடைய படத்தின் பணிகள்முடிந்த பிறகு கண்டிப்பாக விக்ரம் படம் பார்ப்பேன். அவர் என்ன பண்ணாலும்தங்கமாகத்தான்இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகைமெக்கன்ஸி வெஸ்ட்மோரின்தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisment