ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி
வியட்நாம் பகுதிகள் சீன ஹான் வம்சத்தின் பேரரசரான, ‘குவாங் வூ’ ஆட்சியின் கீழ் இருந்தபோது, வியட்நாமின் ஜியோஜி மாகாணத்தின் ஆளுநராக, ‘சு டிங்’ என்பவர் அதிகாரத்தில் இருந்தார். அதேசமயம் ஜியோஜி மாகாணத்தின் மி லிங்க் மாவட்டத்தின் ‘லாக்’ இன மக்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவருக்கு, ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி என இரு மகள்கள் இருந்தனர். இதில், ட்ரங் ட்ரக் எனும் மகளுக்கு மற்றொரு மாவட்டத்தின் தலைவராக இருந்த ஷி சுவே என்பவருடன் திருமணம் நடக்கிறது.
தம் ஆளுகைக்குள் இருக்கும் வியட்நாமின் இரு பெண்கள் தன் ஆளுநரை மாகாணத்தில் இருந்து ஓடவிட்டதால் சினம் அடைந்த சீன பேரரசர் குவாங் வூ, ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி எதிராக போரிட்டு அவர்களை வீழ்த்த கி.பி. 46ம் ஆண்டு வாக்கில் தனது தளபதியான, ‘ம யுவான்’ தலைமையில் 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பினார். இந்த பெரும் படையினருடன் போரிட்டு ட்ரங் ட்ரக் மற்றும் ட்ரங் நஹி வீரமரணம் அடைகின்றனர். அவர்களின் தலையும் வெட்டி எடுக்கப்பட்டது.
சீனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி கி.பி. 46ல் உயிரை விட்ட ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி சகோதிரிகளுடன் வியட்நாம் பெண்களின் வீரம் முடிந்துவிடவில்லை. இவர்கள் மறைவடைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய லேடி ட்ரியூவின் பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வியட்நாம் சுதந்திரத்திற்காக போராடினர். சீன வூ வம்சத்தின் படை, லேடி ட்ரியூ மீது 30க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் யார் வென்றது? லேடி ட்ரியூ என்ன செய்தார்?
பயணம் தொடரும்...
நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 9