ADVERTISEMENT

இதுவரை யாரும் செய்யாத சாதனையைச் செய்த ஜோ ரூட்!

04:25 PM Feb 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இதன்பிறகு இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஜோ ரூட்டும், டொமினிக் சிபிலியும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், தனது நூறாவது டெஸ்டில் சதமடித்ததோடு புதிய சாதனையையும் படைத்தார். இதுவரை யாரும் 98,99,100-வது டெஸ்ட் என மூன்று போட்டிகளிலும் சதமடித்ததில்லை. தனது கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்த ஜோ ரூட், இப்போட்டியில் சதமடித்ததன் மூலம், 98,99,100-வது டெஸ்டுகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இங்கிலாந்து அணி 263 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து நல்ல நிலையில் ஆடி வருகிறது. இந்தியத் தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT