ashwin

இந்தியா - இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட்போட்டி, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ்வென்று முதலில் பேட்டிங்செய்தஇந்தியஅணி, 329 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மாசதமடித்து 161 ரன்கள்குவித்தார். ரஹானே, ரிஷப்பந்த் அரைசதமடித்தனர்.இங்கிலாந்து அணியின்பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் அந்த அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின்ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

Advertisment

இதனையடுத்து, 195 ரன்கள்முன்னிலையோடு களமிறங்கிய இந்தியஅணி, அஸ்வின் சதத்தாலும், விராட்கோலியின் அரைசதத்தாலும், இங்கிலாந்திற்கு 482 ரன்களை இலக்காகநிர்ணயித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸைப்போலவேதடுமாறியது. மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில்அந்த அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, நான்காம்நாள் ஆட்டமானஇன்றும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில்அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஜோரூட்33 ரன்கள்எடுத்தார். இறுதியில் அந்த அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதோடு, முதல் டெஸ்ட்போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அக்ஸர் படேல், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

Advertisment