இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து பேட்டிங்செய்தது.
இங்கிலாந்தின் தொடக்கஆட்டக்காரர்கள், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள்சேர்த்தனர். இதன்பிறகு இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஜோரூட்டும், டொமினிக் சிபிலியும்சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். முதல்நாளின் கடைசிபந்தில்டொமினிக் சிபிலி, பும்ராபந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து263 ரன்கள்எடுத்தது.
#SpiritOfCricket at its very best ??#INDvENG@Paytm | @imVkohlipic.twitter.com/vaEdH29VXo
— BCCI (@BCCI) February 5, 2021
முன்னதாக இந்தப் போட்டியில் சதமடித்த ஜோரூட், காலில்தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அப்போது இந்தியகேப்டன்விராட்கோலி, இங்கிலாந்து பிசியோதெரபிஸ்ட்கள் வரும்வரை, ஜோரோட்டின்காலைதூக்கிபிடித்தபடி நின்றார். விராட்கோலியின்இந்தச் செயலலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.