ADVERTISEMENT

முதல் வெற்றிக்காக காத்திருக்கும் நடப்பு சாம்பியன்! - ஐ.பி.எல். போட்டி #14

04:00 PM Apr 17, 2018 | Anonymous (not verified)

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 14ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்கும்.

ADVERTISEMENT

இந்தத் தொடரில் மிகவும் பவர்ஃபுல்லான பேட்டிங் லைன்அப் என பெருமையாக சொல்லப்பட்ட பெங்களூரு அணியும், நடப்பு சாம்பியனான மும்பை அணியும் மிக மோசமான நிலையில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மும்பை அணியைப் பொருத்தவரை வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து தொடர் தோல்விகளைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரேயொரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்றுள்ள நிலையில், கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி சிறப்பாக ஆடி தனது வெற்றிக் கணக்கை தொடங்கவேண்டும். அதேசமயம், பெங்களூரு அணியும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT