Skip to main content

கெயில் - ராகுலைத் தவிர பஞ்சாப் அணியில் யாருமே இல்லையா?

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான டி20 போட்டி நேற்று இரவு, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் சார்பில் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்திருந்தார். 

 

Rajastan

 

 

 

முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில், சேஷிங் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது கடந்தகால வரலாறு. அதை உண்மையாக்கும் வகையில் பஞ்சாப் அணியின் பேட்டிங் இருந்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலைத் தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடாததே காரணம் என பஞ்சாப் பயிற்சியாளரான ஹாட்ஜ் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் மோசமாக தோற்காததற்கும் ராகுலின் பேட்டிங்கே காரணமாக இருந்தது.

 

நேற்றைய போட்டியில் 70 பந்துகளைச் சந்தித்த கே.எல்.ராகுல் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் மற்றும் ஸ்டாய்னஸைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பி ஏமாற்றினர். 

 

KXIP

 

இது பஞ்சாப் அணிக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னால் ராஜஸ்தான் அணியுடன் பஞ்சாப் மோதுவதற்கு முந்தைய போட்டி வரை அந்த அணியின் தொடக்க வீரர்கள் கெயில் (5 போட்டிகள் மட்டுமே) மற்றும் ராகுல் இணை சேர்ந்து 473 ரன்கள் அடித்திருந்தனர். இது பஞ்சாப் அணி இந்த சீசனில் அடித்த மொத்த ரன்களில் 60 சதவீதமாக இருந்தது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ராகுல் மற்றும் கெயில் முறையே 84, 8 மற்றும் 95, 1 ரன்கள் எடுத்திருந்தனர். இந்தூர் போட்டியில் ராகுலின் அதிரடி ஆட்டமே வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஒருவேளை கெயில் கைகொடுத்திருந்தால் கூட ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

 

KXIP

 

கருண் நாயர், மனோஜ் திவாரி, ஆரோன் ஃபின்ச் போன்ற ஐ.பி.எல். அனுபவமிக்க வீரர்கள் கூட பெரிதாக விளையாடதே பஞ்சாப் அணியின் பின்னடைவிற்குக் காரணம். பஞ்சாபின் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இனிவரும் போட்டிகளில் இந்தத் தவறுகள் களைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

 

 

Next Story

ஒரே 'தல'தான்... ரசிகைக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

kl rahul

 

 

13-வது ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்தப் போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

 

முதலாவது சூப்பர் ஓவரில், கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரசிகை ஒருவர் என்னுடைய 'தல' எனப் பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த கே.எல்.ராகுல், 'ஒரே ஒரு 'தல'தான் இருக்கிறார். அது யாரென்று அனைவருக்கும் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

மயங்க் அகர்வாலை புகழ்ந்த பீல்டிங் ஜாம்பவான்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Mayank Agarwal

 

 

மயங்க் அகர்வால் பீல்டிங் குறித்து பீல்டிங் ஜாம்பவானும், பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்த போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. 

 

இரண்டாவது சூப்பர் ஓவரின் இறுதிப்பந்தில் எல்லைக்கோட்டருகே நின்ற மயங்க் அகர்வால், பொல்லார்ட் அடித்து சிக்ஸருக்குச் சென்ற பந்தை லாவகமாகத் தடுத்தார். மயங்க் அகர்வாலின் இந்த பீல்டிங் பஞ்சாப் அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெரிதும் கைகொடுத்தது. இதனையடுத்து அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ், "மயங்க் அகர்வால் பீல்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. பொல்லார்ட் மாதிரியான வீரர்கள் களத்தில் இருக்கும் போது, பவுண்டரிகளை தடுத்து பீல்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று நாம் முன்னரே பேசியிருக்கிறோம். அதிக நேரம் செலவிட்டு பவுண்டரி எல்லையில் பயிற்சி செய்தோம். இது நம் வீரர்களுக்கு சிறப்பு திறமையாகிவிட்டது. கடினமான நேரங்களிலும் நம் வீரர்கள் பொறுமையாக செயல்படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது" என பஞ்சாப் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் பேசியுள்ளார்.