ADVERTISEMENT

சி.எஸ்.கே. கலாச்சாரம்.. தோனியுடன் வலைப்பயிற்சி.. உற்சாகத்தில் சாண்ட்னர்!

04:17 PM Feb 20, 2018 | Anonymous (not verified)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்த பல உற்சாகமான கருத்துகளை நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிட்சல் சாண்ட்னர். சி.எஸ்.கே.யில் விளையாடுவது குறித்து அவர், ‘சி.எஸ்.கே. கேப்டன் தோனியுடன் போட்டிகளில் விளையாடுவதை விட, வலைப்பயிற்சியில் ஈடுபடுவதிலேயே நான் ஆர்வமாக இருக்கிறேன். தல தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பேசுவதற்கும், விளையாடுவதற்கும், சி.எஸ்.கே. கலாச்சாரத்தில் ஐக்கியமாகுவதற்குமான என் எதிர்பார்ப்புகளுக்கு எல்லையே இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் விளையாட்டுச் சூழல் பற்றி அவர், ‘இந்தியாவின் பெரும்பாலான மைதானங்களில் இருக்கும் மெதுவான பிட்சுகள், என்னைப் போன்ற ஸ்பின்னர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. மேலும், மைதானம் முழுவதும் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழியும் காட்சியை, சொந்த மண்ணில் கூட காண முடியாது’ என உற்சாகமாக பேசியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT