
16 ஆவது ஐபிஎல் சீசனின் 29 ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தனர். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன்புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்திலேயே நீடிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
போட்டிக்கு பிறகு கேப்டன் தோனி ஐதராபாத் அணியைச் சேர்ந்த இளம் வீரர்களை சந்தித்து ஆலோசனை கூறிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் தமிழக வீரர் டி.நடராஜன் குடும்பத்தினரை சந்தித்த தோனி அவரது குழந்தையுடன் கொஞ்சி விளையாடினார். பின்னர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)