ADVERTISEMENT

நடராஜன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

04:03 PM Jan 23, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டாம் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. காயங்கள், இனவெறித் தாக்குதல் எனப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்திய அணி பெற்ற இந்தச் சாதனை வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வெற்றியோடு ஊர் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஐந்து கோடி பரிசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆறு இளம் வீரர்களுக்கு கார் பரிசளிக்கப்போவதாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இந்த கார்கள், நிறுவனத்தின் பணத்தில் அல்லாது தனது சொந்தப் பணத்தில் வழங்கப்படும் என்றும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், "இந்தியாவின் எதிர்கால இளைஞர்கள் கனவு காணுவதையும், முடியாதவற்றை செய்து பார்ப்பதையும் சாத்தியமாக்கியுள்ளனர். அவர்களுடையது உண்மையான எழுச்சிக் கதைகள். தடைகளைத் தாண்டி சிறப்பான ஒன்றை எட்டியிருக்கிறார்கள். இந்தப் பரிசுக்கான காரணம், இளைஞர்கள் தங்களை நம்பும்படியும், குறைவானவர் பயணித்த பாதையைத் தேர்ந்தெடுங்கள் என அறிவுறுத்துவதே ஆகும்" வாழ்த்துகள் முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், சுப்மான் கில், நடராஜன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT