இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்மூன்றாவது டெஸ்ட்போட்டி சிட்னியில் நேற்று (07/01/2021) தொடங்கியது. மழையால்பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின்தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில்சைனிபந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித்மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத்தொடங்கினர். சிறப்பாக ஆடியலபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாம்நாளானஇன்று (08/01/2021) லாபூஷனே 91 ரன்கள்எடுத்த நிலையில்ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறத்தில் சிறப்பாக ஆடியஸ்மித், 131எடுத்த நிலையில் ஜடேஜாவால்ரன்அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி, 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது.
இந்திய அணி தரப்பில், ஜடேஜா4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சைனிஆகியோர்தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ்1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.