இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரானமூன்றாவது டெஸ்ட்போட்டி, தற்போது நடைபெற்று வருகிறது. இதில்முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலியா அணி, 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியஅணி பேட்டிங்கைத் தொடங்கியது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்சர்மாவும், சுப்மன்கில்லும்இறங்கினர். ரோகித் சர்மா, முதன்முதலாக வெளிநாட்டுடெஸ்ட்போட்டியில்தொடக்கஆட்டக்காரராக களமிறங்கினார். இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 26 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. இது ஒரு மோசமான புள்ளி விவரத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆசியாவிற்கு வெளியே இந்தியாவின் தொடக்கஜோடி இருபது ஓவர்களைக் கடந்ததில்லை என்ற மோசமான புள்ளி விவரத்திற்கு ரோகித் - கில் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2010 ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்த டெஸ்டில், சேவாக் - கம்பீர் ஜோடி 29.3 ஓவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தது. அதன்பிறகு எந்த இந்தியதொடக்கஜோடியும், ஆசியாவிற்கு வெளியில் நடக்கும் டெஸ்டில் 20 ஓவர்கள்நிலைத்ததில்லை. அதனை மாற்றி காட்டியிருக்கிறது ரோகித் சர்மா -சுப்மன்கில்ஜோடி.
தற்போது நடைபெற்றுவரும்போட்டியில், ரோகித்26 ரன்களிலும், நன்றாக ஆடியகில், அரைசதமடித்து ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.