ADVERTISEMENT

சிறுநீர் கற்கள் எப்படி உருவாகிறது? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

03:00 PM May 29, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது; உடலில் அப்படியான சிக்கலை எதிர்கொண்டால் அதற்கு ஹோமியோபதி மருத்துவம் தருகிற விளக்கம் என்ன என்பது குறித்து நமக்கு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.

சிறுநீரக கற்கள் பலருக்கு இருக்கிறது. நாம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் ஏற்படுபவை தான் சிறுநீரக கற்கள். அவற்றிலும் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரையாக வருவது, மருத்துவரை அணுகாமல் நாமாக முடிவெடுத்து மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களினால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உடல் பருமன் ஆகிய காரணங்களினாலும் இது ஏற்படலாம். இதற்கான முக்கிய அறிகுறி அடிவயிற்றில் வலி ஏற்படுவது.

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, வாந்தி, சிறுநீரில் நாற்றம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். கற்களின் அளவைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறும். ஹோமியோபதியில் இதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஹோமியோபதி முறையில் வலியே இல்லாமல் மருந்துகளின் மூலமாகவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை குணப்படுத்தலாம். சிலருக்கு தொற்று காரணமாக காய்ச்சலும் வரலாம். ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கு மருந்துகளும் மாத்திரைகளும் வழங்கப்படும்.

சிலருக்கு இரண்டே நாட்களில் இந்தப் பிரச்சனை சரியாகும். சிலருக்கு ஒரு வருடம் கழித்து கூட சரியாகும். நோயாளிகளின் உடல்வாகு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் குணமாகும் கால அளவில் மாற்றங்கள் ஏற்படும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லை என்றால் எலுமிச்சை சாறு குடிக்கலாம். இளநீர் குடிக்க வேண்டும். நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் பால், தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன், மீன், நட்ஸ், துரித உணவுகள், காபி, டீ ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT