/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Arunachalam_14.jpg)
சரியானதூக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்து டாக்டர் அருணாச்சலம் நம்மிடம் விளக்குகிறார்.
இப்போது பலர் விடியற்காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதை நான் பார்க்கிறேன். இதனால் அவர்களுடைய தூக்கம் கெடுகிறது. அதிகாலை நேரம் தான் நாம் நன்றாகத் தூங்கும் நேரம். அதிகாலையில் எழுபவராக இருந்தால் இரவில் விரைவாகத் தூங்க வேண்டும். தூக்கத்தைக் கெடுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உணவு, உறக்கம் அனைத்தையுமே தினமும் ஒரே நேரத்தில் அமைத்துக்கொள்வது நல்லது. உடல் உழைப்பு தான் நமக்கான சக்தியை வழங்குகிறது. இப்போது உடல் உழைப்பு அதிகம் இல்லாததால் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் அதீத உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இரவு ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதீத உடற்பயிற்சி அதிக வியர்வையை வெளியேற்றும்; உடல் வியர்வையை நிறுத்துவதற்கு தனியாக மருந்துகள் எதுவும் இல்லை. துணியைக் கொண்டு துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.வியர்வை வெளியேறுவதாலும் உடல் களைப்படையும். நீரை இழக்கும்போது அதற்கு இணையாக நீரைப் பருக வேண்டும்.
களைப்பாக இருக்கும்போது நீர்மோரில் உப்பு கலந்து பருகலாம். உடற்பயிற்சி கூடங்களில் இழக்கும் எனர்ஜியை நிச்சயமாக ஈடு செய்ய வேண்டும். கோடைக்காலத்தில் வயோதிகர்களும் இளைஞர்களும் ஓஆர்எஸ் வாங்கிப் பருகலாம். சிலருக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். அவர்கள் மாலையிலும் ஒருமுறை குளிக்கலாம். குளிக்காமல் விட்டால் வியர்வையால் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)