ADVERTISEMENT

கல்வியில் கால்பதிக்கும் கூகுள்...!

11:27 AM Mar 07, 2019 | tarivazhagan

குழந்தைகளுக்கு இன்று கிடைக்கும் முறையான, முழுமையான கல்வி அடுத்த தலைமுறையின் பாதையை மாற்றி அமைக்கும். அதன் ஒரு முயற்சியாய் கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயலி ‘போலோ’வை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் குழந்தைகள் தங்களின் கற்றல் திறனையும், உச்சரிப்பு திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் செயல்படுகிறது. குழந்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு படிக்கும் நேரத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அதனை தீர்க்கவும், சில யோசனைகளை கொடுக்கவும், வார்த்தை உச்சரிப்பை முறைப்படுத்தவும் அந்த செயலியில் ‘தியா’ எனும் பெயர் கொண்ட ஒரு கார்ட்டூனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் தருகிறது.



கிராமப்புறங்களில் இணைதள சேவை தடையில்லாமல் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதால், அதனை ஈடுசெய்யும் வகையில் இந்த செயலி ஆஃப்-லைனிலும் இயங்கும் வகையில் கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

போலோ செயலி கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலி, இந்தியா முழுக்க 200 கிராமங்களில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களிடையே சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 920 மாணவர்களில் 64 சதவீதம் பேருக்கு இந்த செயலி கற்றல் ஆற்றலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தி மொழியில் ‘போலோ’ என்றால், பேசு என்று பொருள்.

எந்த சமுதாயம் கல்வியில் முழுமை பெறுகிறதோ அந்த சமுதாயமே வளர்ச்சி பெறும். அதிலும் ஒரு சமுதாயம் அதன் தாய் மொழியில் ஒரு கருத்தை கற்கும்போது அதன் அறிவு வளர்ச்சி, சிந்தனை ஆற்றல், கற்றதில் இருந்து புதுமையான விஷயங்களை தேடுவது போன்ற பல பரிணாமத்தை அது அடைந்து உலகிற்கு புதுமைகளை வாரிவழங்கும். ‘போலோ’ செயலி தற்போதைக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

கூகுளின் கடந்த கால சேவை முன்னுரிமைகளை பார்த்தோம் என்றால், முதலில் கூகுள் தனது சேவையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கி அதன்பின் மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என மாநில மொழிகளில் தன் சேவை தரும். அதன் அடிப்படையில் விரைவில் போலோ செயலியும் மாநில மொழிகளில் வரலாம் என எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT