Gmail

இணைய பயன்பாட்டில் முன்னணி நிறுவனமாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பல செயலிகள் மக்கள் பயன்பாடு மற்றும் அலுவலகபயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் வசதிகள் தற்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முடங்கியுள்ளன.

Advertisment

இதனால் ஜிமெயிலில் இருந்த மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமலும், கூகுள் ட்ரைவில் புகைப்படம், வீடியோ என எதையும் பதிவேற்ற முடியாமலும்பயனாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த முடக்கமானது இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதமும் ஜிமெயிலில் இதே போல பிரச்சனைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment