ADVERTISEMENT

சர்க்கரை வியாதி வரக்கூடாதா? கட்டாயம் விரதம் இருங்க!

06:41 PM Mar 31, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடவுள் நம்பிக்கையால் பலர் விரதம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் என்னென்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார்

ஒரு காலத்தில் குளிர்காலங்களில் குகைக்குள் மறைந்து ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர். உணவு கிடைக்காதபோது உபவாசம் இருப்பது அப்போது சாதாரண விஷயம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் விரதம் இருக்கும் முறை இருக்கிறது. ஆறு நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருக்கும் சஷ்டி விரத முறை தமிழர் மரபில் இருக்கிறது. அனைத்து வகையான மருத்துவங்களிலும் விரதம் இருக்கும் முறை இருக்கிறது.

அறிவியல் ரீதியாகவும் விரதம் இருப்பது நல்லது என்று சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. உடல் தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தின்று செரிப்பதே விரதத்தின் போது நடக்கிறது. தேவையில்லாத வைரஸ், பாக்டீரியாக்கள் விரதத்தின் போது நீக்கப்படுகின்றன. கேன்சர் செல்களும் இதன் மூலம் குணப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. தேவையான உப்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டு உணவு உண்ணாமல் 30 நாட்கள் வரை இருக்க முடியும். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும் விரதத்துக்கு உண்டு. விரதத்தின் மூலம் இளமையான உடல் தோற்றம் உருவாகும். 72 மணிநேரம் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு. விரதத்தால் சில பின்விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது. விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் விரதத்தால் கேன்சர் நோய் குறைவாக இருக்கிறது.

விரதத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். விரதம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. நம்முடைய மனத்தால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விரதம் மூலம் நாம் உணரலாம். விரதத்தின் போது தண்ணீர், உப்பு, சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மாதம் ஒரு முறை மட்டும் விரதம் இருப்பது சரியானது என்பது என்னுடைய கருத்து. விரதத்தால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் வாய்ப்புகள் அதிகம். விரதத்தால் நன்கு தூக்கம் வரும். மறதி குறையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை விரதத்தினால் நன்மைகள் உண்டு.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT