/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/v (2)_0.jpg)
வீகன் டயட்என்பது இந்திய அளவில் பலர் தற்போது பின்பற்றி வரும் ஒரு உணவுமுறை. அந்த உணவுமுறையை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விரிவாக விளக்குகிறார்
பல பிரபலங்கள் வீகன் முறையின் மூலம் உடல் எடையைக் குறைத்ததாகவும், உடல் வலுவை அதிகரித்ததாகவும் சொல்வார்கள். ஆனால், அவர்கள் தங்களுக்கு அருகில் ஊட்டச்சத்து நிபுணரை வைத்துக்கொண்டு தேவையான வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இதை நம்பி சாதாரண மக்களும் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். பட்டாணி சாப்பிட்டாலே புரோட்டின் சத்து நமக்குக் கிடைத்துவிடும். இதை மாத்திரையாக சாப்பிட வேண்டிய அவசியமில்லை.
குழந்தைகளுக்கு வீகன் முறையில் உணவுகள் கொடுப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். மலிவான விலையில் கிடைப்பதால் இந்த உணவு முறையைப் பின்பற்றுவது சரியல்ல. மேலும் இதனால் பலருக்கு உடல் எடை கூடுமே தவிர குறையாது. சில விஷயங்களைபலர் பின்பற்றுவதாலும், அது குறித்து அதிகம் விளம்பரப்படுத்தப்படுவதாலும் அதன் மீது பலருக்கு ஆவல் ஏற்படுகிறது.
முட்டையில் கிடைக்கும் அமினோ ஆசிட் வீகன் உணவில் கிடைக்காது. வீகன் உணவுகளால் சர்க்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எலைட் வகையிலான மக்கள் பின்பற்றுவதால் அனைவரும் இந்த முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எளிய மக்களின் எளிய உணவுகள் நல்ல ஆரோக்கியத்திற்குப் போதுமானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)