ADVERTISEMENT

சுவாசக் கோளாறுக்கு ஜோதிடக் காரணம்?

03:25 PM Apr 24, 2019 | Anonymous (not verified)

ஒருவர் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறார் என்றால், அதற்குக் காரணம்- அவருடைய வயிற்றில் பித்தம் அதிகமாக இருப்பதுதான். பலரின் நுரையீரல்களில் சீதளம் இருக்கும். அதனால் சுவாசக் குழாய்களில் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார். இந்தப் பிரச்சினை வருவதற்கு அவருடைய ஜாதகத்தில் இருக்கும் புதனின் நிலையும் காரணம்.

ADVERTISEMENT



ஒரு ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாக இருந்து, 3-ஆம்பாவம் கெட்டுப்போயிருந்தால், அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சினை இருக்கும். ஜாதகத்தில் 3-ஆவது பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு சுவாசப் பிரச்சினை இருக்கும். 3-ஆவது பாவாதிபதி 6-ஆவது பாவத்தில், 6-ஆவது பாவாதிபதியுடன் இருந் தால், அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல்கள் இருக்கும். ஒரு மனிதர் பிறக்கும் போது அவருடைய ஜாதகத்தில் சந்திரன் 8-ஆவது பாவத்தில் இருந்தால், அவருக்கு சுவாசப் பிரச்சினை, சீதளம் ஆகியவை இருக்கும்.

ADVERTISEMENT



ஒருவர் பிறக்கும் போது, அவருக்கு 8-ஆம் அதிபதி அல்லது 6-ஆம் அதிபதியின் தசை நடந்தால், அவருக்கு மூச்சுவிடுவதில் கஷ்டங்கள் இருக்கும். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக (தேய்பிறைச் சந்திரன்) 6, 8, 11-ல் இருந்தால், அவருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். அதனால் உணவு ஜீரணமாகாது. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். ஜாதகத்தில் லக்னத் தில் சனி, 7-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது. அதனால் சுவாச நோய் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்து, அதை சனி பார்த்தால், ஜாதகர் உணவு விஷயத்தில் கட்டுப்பாடே இல்லாமல் இருப்பார். அதனால் மூச்சுப் பிரச்சினை இருக்கும். ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் செவ்வாய், சுக்கிரன் அல்லது செவ்வாய், ராகு இருந்து சந்திரன் பலவீனமாக 5 அல்லது 11-ல் இருந்தால், அவர் அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று நினைப் பார். உணவு சரியாக ஜீரணமாகாது. அதனால் பித்தம் உண்டாகும். நடக்கும்போது மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவார்.



ஜாதகத்தில் 3-ஆம் பாவத்தில் செவ்வாய், சனி, சூரியன் இருந்தால் அவருக்கு சுவாச நோய் ஏற்படும். அதன்காரணமாக படிகளில் ஏறும்போது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன், ராகு, சூரியன், புதன் இருந்து, அதே ஜாத கத்தில் சனி நீசமடைந்தால், அவருடைய சரீரம் மிகவும் கனமாக இருக்கும். நடப்பதற்கு சிரமப்படுவார். மூச்சுவிடுவதில் பிரச்சினை இருக்கும்.

லக்னத்தில் ராகு, புதன், 3-ல் செவ்வாய், சனி, 9-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அவருடைய சரீரம் பருமனாக இருக்கும். அதனால் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார். மூச்சுவிடுவது கஷ்டமாக இருக்கும். 3-ல் நீசச் சனி செவ்வாயுடன் இருந்து, 11-ல் சந்திரன் இருந்தால் அவருக்கு சுவாசப்பிரச்சினை இருக்கும். 7-ல் உச்ச செவ்வாய், 12-ல் சந்திரன் இருந்தால், அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாததே காரணம். எப்போதும் அதிகமாக சாப்பிடுவார்.

சந்திரனுக்கு 8-ல் சனி இருந்தால், அவர் சரியான நேரத்தில் சாப்பிட மாட்டார். சரியான நேரத்தில் தூங்கமாட்டார். எப்போதும் அலைந்துகொண்டேயிருப்பார். அதனால் உணவு ஜீரணமாகாது. பித்தம் ஏற்படும். அதனால் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவார். ஒரு வீட்டின் வடகிழக்கில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அங்கு இருப்பவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படும். ஒரு வீட்டின் வடகிழக்கில் கழிவறை இருந்து, அந்த வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்தால், அங்கிருப்பவருக்கு சுவாசப் பிரச்சினை உண்டாகும்.

வீட்டின் பிரதான வாசல் தென்மேற்கில் இருந்து படுக்கையறை வடமேற்கில் இருந்தால் அங்கிருப்பவருக்கு உணவு ஜீரணமாகாது. சுவாச நோய் இருக்கும். ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் சந்திரன், புதன், சுக்கிரன் அல்லது சந்திரன், புதன், சூரியன் இருந்தால் அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சினை இருக்கும். மனநோய் இருக்கும் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பார். ஒருவர் வாழும் வீட்டில் பச்சைநிறம் அதிகமாக இருந்தால், அவர் மேற்கில் தலைவைத்துப் படுத்தால், அவர் ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாக இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால் அவருக்கு சுவாச நோய் இருக்கும். 6-ல் சனி, 8-ல் சந்திரன் அல்லது செவ்வாய் இருந்தால், அவருக்கு பித்தம் அதிகமாக இருக்கும். உணவு ஜீரணமாகாது. மலச்சிக்கல் இருக்கும். அதனால் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவார்.

பரிகாரங்கள்

தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். படுக்கையறையில் சிவப்பு, பச்சை வண்ணங்கள் இருக்கக்கூடாது.

தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் பருகவேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும். தினமும் சிவனை வழிபட்டு, அவருக்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். சனிக்கிழமை அரசமரத்திற்கு தீபமேற்றி வழிபடுவது நல்லது.

தினமும் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்வது நன்மை தரும். தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். வீட்டின் கழிவறையில் இரண்டு கிலோ உப்பை வைக்கவேண்டும்.

மகாமிருத்யுஞ்ஜய யந்திரத்தை வீட்டில் வைத்துப் பூஜை செய்ய நற்பலன் உண்டாகும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT