விசா இல்லாமல் கத்தாருக்கு செல்ல முடியும்: அந்நாடு அதிகாரிகள் அறிவிப்பு
கத்தார் நாட்டுக்கு வணிக நோக்கிலும், வேலையைத் தேடியும், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கத்தாருக்கு செல்ல விரும்பினால், விசா இனி விண்ணப்பிக்க தேவையில்லை என அந்நாடு அதிகாரிகள் திடீரென அறிவித்துள்ளனர்.
இதற்காக பணமும் கட்டத் தேவையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சலுகையைப் பெற எந்த வரையறையும் இல்லை என்றும், கத்தாருக்கு பல முறை பயணம் செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான பாஸ்போர்ட் மற்றும் நாடு திரும்புவதற்கான டிக்கெட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.