ADVERTISEMENT

முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் - பினாங்கு துணை முதல்வர்

11:55 PM Oct 17, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது.

ADVERTISEMENT

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தற்போது முரளிதரன் தன்னுடைய விளக்க கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பினாங்கு துணை முதல்வர், " முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற துன்பங்கள் பற்றி முரளிதரன் பேசவில்லை. முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம், ஆனால் நல்ல மனிதராக தோல்வியடைகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT