விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், மிஸ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து தியாகராஜான் குமாரஜா இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சூப்பர் டீலக்ஸ். கடந்த 2011ஆம் ஆண்டில் ஆரன்ய காண்டம் என்றொரு படத்தை இயக்கி அதற்காக தேசிய விருதை பெற்றிருந்தார். இந்த படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை என்றாலும் காலங்கள் ஓட ஓட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எட்டு வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது.

Advertisment

vijay sethupathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திருநங்கையாக நடிக்க விஜய் சேதுபதி எடுத்துகொண்ட சிரமத்திற்கும், அவரது நடிப்பிற்கும் பேசப்பட்டார். விமர்சகர்கள் சிலர் இந்த படத்தை கடுமையாகவும் விமர்சனம் செய்தனர். இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா மோட்வானி, வசன் பாலா, உள்பட பலர் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.

Advertisment

தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தை பிரபல நடிகர், நடிகைகளை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. பிரபல இந்தி பட நிறுவனம் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜனை அணுகி படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் கசிந்து வருகிறது.