ADVERTISEMENT

போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகலா? - போப்  பிரான்சிஸ் பதில்!

07:15 PM Sep 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர். இப்போது ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ என்பவர் போப் ஆண்டவராக இருந்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் போப் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார்.

இந்தநிலையில் பெருங்குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸுக்கு கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சூழலில் போப் பிரான்சிஸ், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வாடிகனில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் போப் பிரான்சிஸ் ஸ்பானிஷ் வானொலிக்கு அளித்த பேட்டியில், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகப்போவதாக வந்த தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது மனதில் பதவி விலகுவது குறித்த எண்ணமே எழவில்லை எனவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT