Skip to main content

அமீரகத்தில் அடியெடுத்து வைத்த முதல் போப்; மூன்று நாட்கள் சுற்றுப்பயணம்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

hydfg

 

போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் போப் என்ற பெருமையை போப் பிரான்சிஸ் பெற்றுள்ளார். 3 நாட்கள் அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் இவர் நேற்று அபுதாபி சென்றடைந்தார். முதன்முறையாக தங்கள் நாட்டுக்கு வரும் போப் பிரான்சிஸ்க்கு அபுதாபி அரச குடும்பம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமானங்கள் நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், ஏமன் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அணிஅய்வரின் பிரார்த்தனைகளும், உதவிகளும் தேவை என கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அபுதாபியில் முதல் இந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
First Hindu temple in Abu Dhabi and Worship by Prime Minister Modi

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  

அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று  மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இவர்கள் எப்போது போர்க் கதைகளை முடிப்பார்கள்” - போப் பிரான்சிஸ் வேதனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Pope Francis laments Israel-Palestine conflict

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் போப் பிரான்சிஸ், புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஜெருசேலம் நகரை ஐ.நா நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.