ADVERTISEMENT

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி எழுத்தளார் வி.எஸ் நைபால் காலமானார்

11:50 AM Aug 12, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

1932-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவான ட்ரினாட்டில் பிறந்த அவர் தனது பெற்றோர்களுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன்பின் எழுத்தாளராக உருவெடுத்த வி.எஸ் நைபால் 30-க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய '''ஏ ஹௌஸ் மிஸ்டர் பிஷ்வால்'' என்ற நாவல் அதிக கவனத்தைப்பெற 1971-ஆம் ஆண்டு ''இன் ஏ ப்ரீ ஸ்டேட்'' என்ற புத்தகத்திற்கு புக்கர் விருதும் அதனை தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.

இந்நிலையில் 85 வயதான அவர் நேற்று லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என அவரது மனைவி நிதிரா அல்வி தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு சர்வதேச எழுத்தளார்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT