விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுங்கள் என எவ்வளவு விழிப்புணர்வு மக்களுக்கு கொடுத்தாலும் சில பரிபாத சம்பவங்கள் ஆங்காங்கே நிகழத்தான் செய்கிறது.

Advertisment

ஈரோடு மாவட்டம் பவானி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி வைதேகி. இவர்களுக்கு ஒரு மகனும், தேஜாஸ்ரீ என்ற 9 வயது மகளும் உள்ளனர்.

Advertisment

erode

மாதேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு திருநகர் காலனி ராஜாஜிபுரத்தில் வசித்து வருகிறார். மாணவி தேஜாஸ்ரீ இங்கு உள்ள ஒரு அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தேஜாஸ்ரீ இருந்தார் அப்போது மாணவி பட்டாசு வெடித்த போது எதிர்பாராத வகையில் அவரது துணியில் தீ பிடித்துக் கொண்டது. இதனால் வேதனையில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி தேஜாஸ்ரீ சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மாணவி தேஜாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment