muthaiya

கரூர் மாவட்டம் கடவூர் சமஸ்தானத்தின் 40-வது ஜமீன்தாரான கே.கே.முத்தையா, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, கடவூர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏவானார். 1977-ல் மருங்காபுரியில் போட்டியிட்டு 5-வது முறையாக எம்எல்ஏவானார். உடல் நலக்குறைவு காரணமாக கடவூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: ’’பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து, காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணியாற்றிய கடவூர் கே.கே.முத்தையா காலமான செய்தி கேட்டு மிக்க துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

Advertisment

மூன்று முறை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றியவர். தமது சொந்த பகுதியில் செல்வாக்குடன் விளங்கிய இவர், மக்கள் பணியாற்றி காங் கிரஸ் இயக்கத்தை வளர்த்த பெருமை இவருக்கு உண்டு.

89 வயது நிரம்பிய கே.கே.முத்தையா மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’’

Advertisment