jdeepa

Advertisment

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இன்று ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலையில் முதல் நபராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், அவரது கணவர் மாதவனும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை கருத்தில் கொண்டே அதிமுகவினர் அமைதிப் பேரணி நடத்துகின்றனர். ஜெயலலிதாவின் வழியை இந்த அரசு பின்பற்றவில்லை. போயஸ் கார்டன் உரிமையை மீட்க சட்டப்போராட்டம் தொடரும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும். உண்மையாக நடத்த வேண்டும். மக்களையோ, அதிமுகவின் தொண்டர்களையோ ஏமாற்றாமல் மரணம் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும் என்றார்.