ADVERTISEMENT

இலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்!

03:13 PM Apr 22, 2019 | Anonymous (not verified)

இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயத்தில் மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகினார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக 8 முறை குண்டுகள் வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா , அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கண்டணத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT



அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடி , தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். இவர் இலங்கை தீவிரவாத தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதில் அவர் கூறுகையில் ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இலங்கையில் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் , "தீவிரவாதிகள் ஒருவரையொருவர் நேசிக்க மாட்டார்கள் " .

இதனால் தான் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக மலாலா அவர்கள் தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்தார். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து அமைதி என்னும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது.


பி.சந்தோஷ்,சேலம்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT