இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த திங்கள்கிழமை அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

Advertisment

gotabaya rajapakse to visit pakistan

புதிய அதிபர் கோத்தபய ராஜகபக்சவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

இதேபோல பாகிஸ்தான் தரப்பிலிருந்து வாழ்த்துத் தெரிவித்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், விரைவில் பாகிஸ்தானுக்கு வருகை தர வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜகபக்ச பாகிஸ்தானுக்கு வர சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் பாகிஸ்தானுக்கு வருகை தர வேண்டும். அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார். அதற்கு இலங்கை அதிபரும் இம்ரான் கான் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டது. வரும் 29-ம் தேதி இரு நாட்கள் பயணமாக கோத்தபய ராஜபக்சே இந்தியா நிலையில், எப்போது பாகிஸ்தான் செல்கிறார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Advertisment