பாகிஸ்தானின் அவாமி தெக்ரிக் கட்சியின் பொது செயலாளரான குர்ராம் நவாஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவுக்காக இணையவாசிகளால் கலாய்க்கப்பட்டு வருகிறார்.

Advertisment

pakistani leader posts gta vice city video in twitter

குர்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். இந்த வீடியோவில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும்போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல வந்து கண்ணிமைக்கும் நொடியில் விலகி செல்வது போன்று இருந்தது. இதனை பதிவிட்ட அவர், "விமானியின் சாதுர்யத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது. விமானிக்கு பாராட்டுக்கள். உலகில் இதுபோன்ற அரிய சம்பவம் வேறு எங்கும் நடந்ததில்லை' என பதிவிட்டார்.

Advertisment

ஆனால் இந்த வீடியோ GTA வீடியோ கேமில் உள்ளது என சிறிது நேரத்தில் இணையவாசிகள் கண்டறிந்தனர். எனவே இதனை வைத்து அவரை சரமாரியாக கிண்டல் செய்து வருகின்றனர். நாட்டின் ஒரு முக்கிய நபராக இருந்துகொண்டு இப்படி வீடியோ கேம் வீடியோவை பகிர்ந்து பாகிஸ்தானில் நடந்ததாக கூறுவது சரியாஎனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.