ADVERTISEMENT

சீனாவில் சுரங்கப்பாதை அமைக்கும் போது விபத்து

08:59 AM Nov 28, 2019 | suthakar@nakkh…

சீனாவின் லிங்காங் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கப்பாதைக்கு மேலே இருந்த மண் குவியல் திடீரென சரிந்தது. இதில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. 14 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT


விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். எனினும் 5 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடிபாடுகளுக்குள் இன்னும் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நவீன கருவிகளின் உதவியோடு அவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT