பசியால் அழுத குழந்தைக்கு கடைக்குச் சென்று பால்வாங்கிக் கொண்டு திரும்பிய தந்தை மீது கல்லூரி பேருந்து மோதி பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

incident in keeramangkalam

Advertisment

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கருங்கன் தெரு மாரிமுத்து மகன் தங்கவேல் (வயது 25). வெல்டராக உள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாக பவித்ரா என்ற மனைவியும் சாஷினி (வயது 1) என்ற குழந்தையும் உள்ளனர். தங்கவேல் திருநெல்வேலியில் ஒரு தனியார் லேத்தில் வெல்டராக வேலை செய்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை லேத் விடுமுறை என்பதால் குழந்தையை பார்க்க சொந்த ஊருக்கு வந்திருந்தார். இன்று மதியம் குழந்தை சாஷினி பசியால் அழுதபோது கடைக்குச் சென்று பால் வாங்கி வர தனது மோட்டார் சைக்கிளிலில் சென்றவர் பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது அணவயல் ஆர்ச் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே திருமயம் திமுக எம்எல்ஏரகுபதி குடும்பத்தினர் நடத்தும் ஜெ ஜெ கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

incident in keeramangkalam

சம்பவம் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அடிக்கடி விபத்து நடக்கும் பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல் செய்தனர். வடகாடு போலீசார் நடத்திய சமாதானப் பேசுசுவார்த்தைக்கு பிறகு சடலம் பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தைக்கு பால் வாங்கச் சென்ற தந்தை விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.