வேலூர் கலெக்டர் எதிரே சென்னை - பெங்களுரு இடையிலான தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்த சாலை மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

a

இன்று ஆகஸ்ட் 10 ந்தேதி காலை 11.30 மணியளவில் இந்த மேம்பாலத்தின் மேலிருந்து ஒரு வாலிபர் கீழே குதித்தார். அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் கீழே விழுந்ததும் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று பார்த்து, காவல்துறைக்கு தகவல் தந்தனர். ஏன் குதித்தார், என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார் எனத்தெரியவில்லை.

சம்பவயிடத்துக்கு வந்த சத்துவாச்சாரி போலிஸார், முதற்கட்டமாக குதித்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.