ADVERTISEMENT

பெண் போலீஸின் கையை கடித்த இளைஞர்கள் கைது!!

04:43 PM Jun 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவரது கணவர் திருஞானம் இவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். அதே காவல் நிலையத்தில் அவரது மனைவி எழிலரசி முதல் நிலை காவலராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் எழிலரசி தங்கள் சொந்த ஊரான இடைக்கட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன வளையம் என்ற ஊர் அருகில் இளைஞர்கள் இருவர் சாலையில் நடுவில் நின்ற அப்படியே கையை நீட்டி மறித்துள்ளனர்.

ADVERTISEMENT

சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்திய பெண் போலீஸ் இளவரசி இந்த நேரத்தில் திடீரென்று இப்படி நடுரோட்டில் கையைக் காட்டி வழிமறிக்கலாமா என்று கேட்டுள்ளார். இதனால் அந்த இரு இளைஞர்களுக்கும் பெண் போலீஸ் இளவரசிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமான அந்த இரு இளைஞர்கள் இருவரும் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து இளவரசி தலையில் அடித்துள்ளனர். நல்லவேளை இளவரசி ஹெல்மெட் போட்டு இருந்தார் அதனால் அவரது தலை தப்பியது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்களிடம் இளவரசி கோபமாக கேட்க அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் இளவரசியின் கை விரலை பிடித்து கடித்து விட்டான். இதனால் பெண் போலீஸ் இளவரசி கோபத்துடன் சத்தம் போட்டு இளைஞர்களிடம் பேச அப்போது அவ்வழியே வந்தவர்கள் உதவியுடன் அந்த இளைஞர்கள் இருவரையும் இளவரசி துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

அதோடு அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் ஜெயங்கொண்டம் நகரை சேர்ந்த வல்லரசு, பிரபாகரன் ஆகிய இவர்கள் இருவரும் மீன்சுருட்டி சாலையில் சின்ன வளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கள் பணி முடித்து இரவு நேரம் என்பதால் ஜெயங்கொண்டம் செல்வதற்காக வழியே சென்றவர்களை நடுரோட்டில் நின்று லிப்ட் கேட்பதற்காக மறித்துள்ளனர். ஆனால் இருவரும் போதையில் இருந்ததால் பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இரவு நேரத்தில் பெண் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞர்கள் இருவரையும் தன் கைவிரலில் கடிபட்டு வலியிலும் அவர்களை துணிவுடன் துரத்தி சென்று கைது செய்த பெண் போலீஸ் இளவரசியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் டூட்டி முடிந்து தன் ஊருக்குச் சென்ற பெண் போலீசிடம் வம்பு செய்து அவரது கையை கடித்த இளைஞர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT