Skip to main content

சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள்; பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஜிபி 

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

police dgp appreciate to police officers in ariyalur  

 

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, திருச்சியில் காவல்துறையைச் சார்ந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர் பணிகள் சிறக்க அவர்களை அழைத்துப் பாராட்டினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை பெண் காவலரான வனிதா நீதிமன்ற அலுவல் பணிகளை சிறப்பாக செய்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறுவதற்கு விரைவாக பணி புரிந்தமைக்காக சான்று வழங்கினார்.

 

மேலும் செந்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் செந்தில் முருகன் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் திறமையான முறையில் ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு உதவி செய்தமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மீன்சுருட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரபாகரன்  மீன்சுருட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பாக தகவல் சேகரித்து செயல்பட்டமைக்காக சான்று வழங்கினார்.

 

காவல்துறையினர்  சிறப்பாக தங்கள் பணிகளை செய்ததற்காக  காவலர்களை நேரடியாக அழைத்து பணியைப் பாராட்டி தமிழக காவல்துறை இயக்குநர் சான்றிதழ் வழங்கியது காவல்துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன்,  திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.