ADVERTISEMENT

இப்படியும் ஒரு மோசடி; பெண்ணைக் கைது செய்த காவல்துறை

01:10 PM Nov 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம், கனகம்பாளையத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்து 11.45 டன் வெங்காயம் வாங்கியுள்ளார். சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காயத்தை வாங்கிவிட்டு பல மாதங்களாக பணத்தைத் தராமல் ரேவதி காலம் தாழ்த்தியுள்ளார்.

இது குறித்து திருப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் வாங்கிய வெங்காயத்தை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வேறொரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

கைதான ரேவதி தம்மை வியாபாரி எனக் கூறிக் கொண்டு பலரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT