ADVERTISEMENT

தமிழ்வழி கல்வியில் என்ன இருக்கு? பாட்டுப் பாடி விளக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்! 

01:01 PM Jun 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1ம் முதல் 10ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி திறப்பு நாளான இன்று அம்மைய நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பளியில் குழந்தைகளைச் சேர்ந்த பெற்றொர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள், முதலாவதாக சேர்க்கைக்கு வந்த மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர், சேர்க்கைக்கு வருகின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றும் தமிழ் வழிக் கல்வியில் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் பாடலாகப் பாடி அசத்தினார்.

‘அரசோட பள்ளிக்கு வாங்க..
பிள்ளைகளை சேர்த்துவிட்டு போங்க...
கல்வியில் வேலை வாய்ப்பில் ஏழு புள்ளி அஞ்சு சதமும்...
தமிழ் வழியில் படித்தாலே... இருபதுசதம் இடமுண்ட’
என்றும், தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித் துறையில் கொண்டுவந்த சாதன திட்டங்களை விளக்கியும் பாடல் பாடினார். இந்த தொடக்கப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT